உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சால்பு என்கின்ற பெருந்தன்மையான பண்பாட் டினை ஐந்து துரண்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. என்பதாகக் குறட்பா ஒன்று பேசுகின்றது. அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடுஐந்து சால்பூன்றிய துரண்'. - இக்குறட்பாவில் ஊன்றிய என்றொரு அழகிய சொல்லினை ஆசிரியர் அமைத்திருக்கின்றார். துரண்கள் இல்லாவிட்டால் பாரத்தினைத் தாங்கு, வதற்கு வேறு வழியில்லை. அதுவே போல சால்பு. என்கின்ற குணத்தினைத் தாங்கிக்கொண்டிருக்கும்: குணங்கள் எனக் கூறப்பட்டன. புகழெய்தி வாழவேண்டும் மேலோங்கிப் புகழெய்தி வாழவேண்டிய வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும் என்ற உண்மையினை இக்குறட்பா வற்புறுத்துகின்றது. மக்களோடு தொடர்பு கொண்டு, இணைந்து ஒன்று. பட்டு வாழ்கின்ற தன்மையினை கற்குணங்களே உண்டாக்கும் என்பதும் புலனாயிற்று. - பிற உயிர்களிடத்தில் சிறப்பாகக் காணமுடியாத, பண்பு அன்பேயானபடியினால் சான்றாண்மைக் குணத்திற்கு அது இன்றியமையாததாகக் கூறப். பட்டது. சால்பு இல்லாத மக்கள் பயனற்றவர்கள் என்பது தெளிவான கருத்தாகும். பொருள் பெற்றிருந். தாலும் மனிதப் பண்பாடு இல்லாதவர்கள் உலகில் வாழ்ந்து வருவது தேவையற்றதேயாகும். . .