உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 சான்றோர்களினால் உலகம் கல்ல முறையில் கடந்து வருவதாகும். சால்பு' என்கின்ற பண்பாடு மிக உயர்ந்ததாகும். சான்றோர்களுக்கு முற்றிலும் மாறு பட்ட கீழ்மை நிலையுடைய தன்மைகளைப் பெற்றவர் களே கயவர்களாவார்கள். சான்றோர்களின் பண்பு பிறருக்கு என்றென்றும் உதவியாக இருப்பது சான்றோர்களின் பண்பாகும். துன்பம் செய்தவர் களுக்கும் இன்பம் செய்து அவர்களை கல்வழிப் படுத்துதல் சான்றோர்களின் கடமையாக இருக்கும். உள்ளத்தில் உள்ள கொள்கைகளை உறுதியுடன் என்றென்றும் கிலைத்து கிற்க வாழ்பவர்கள் சான்றோர்களாவர். மக்கட்பிறப்புக்குரிய அருமையான குணங்களெல்லாம் சான்றோர்களிடத்தில் காணப்படும். மற்றவர்களிடத்தில் அன்புடன் பழகுவார்கள். இழிவான செயல்களைச் செய்வதற்கு அஞ்சுவார்கள் காணுடைமையினைக் கொண்டிருப்பார்கள். தக்கவர்களுக்குப் பேருதவி புரிய நாட்டங் கொள்வார்கள். அன்பும் க்ட்பும் நிறைந்தவர்களிடத்தில் இரக்கம் காட்டிக்கருணையுடன் கடந்து கொள்வார்கள். உண்மையே பேசுவார்கள். இத்தகைய பண்பாடு களெல்லாம் சால்பு' என்கின்ற சான்றாண்மையினைப் பெற்றிருப்பவர்களிடம் காணப்படுவனவாகும். -