பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' கடமாடும் பல்கலைக் கழகம்' நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்கள் பாராட்டுரை

  • * * * * * பழைய உரையாசிரியர்கள் ஆகியோரின் கருத்துக் களின் ஆழத்தையும், அகலத்தையும், உயரத்தையும் நன்கு அறிந்து உள்ளத்தே வைத்துக் கொண்டு, ஒவ்வொரு குறளின் வெளிப் பொருள்-உட் பொருள்-கருப் பொருள் -தெளி பொருள்-உணர் பொருள்-அறிபொருள் ஆகிய வற்றையெல்லாம் உணர்ந்து, அவற்றை நடைமுறை உலகியல் வாழ்க்கையின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லுக்குச் சொல் சுவையறிந்து, பொரு ளுக்குப் பொருள் ஒளியுணர்ந்து, சடற்ற, எடுப்பான ஒரு நனி சிறந்த உரை விளக்கத்தை, உலகப் பொது மறையாம் திருக்குறளுக்கு இன்றைய நிலையில் தந்துள்ள பெருமை திருக்குறளார் வீ. முனிசாமி பெருந்தகையாளரையே சாரும்.

குறட்பாக்களுக்குக் குறிப்புரை தந்து, பொருளுரை பயந்து, கருத்துரை வழங்கித், தெளி பொருள் விளக்கம் தந்து, பண்டிதர் மட்டுமல்லாமல் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி நகைச்சுவையோடு சொல்லி, அவர்களைச் சிரிக்க வைத்து, நயப்பாடுகள் கூறிச் சிந்திக்க வைத்துத்,