பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

м 1W திருக்குறளை முழுமையாகக் கொண்டு வந்து நிறுத்தும் வல்லமை பெற்றவர் ஒருவராகத்தான் இருக்கிறார்; ஒரே ஒருவராகத்தான் இன்றைய நிலையில் இருக்க முடிகிறது. அந்த ஒரே ஒருவராகக் காட்சியளிப்பவர்தாம் பெரு மதிப்பிற்குரிய திருக்குறளார் ஆவார்கள். திருவள்ளுவர் சிறு குறட்பாவினுள் பெருங் கருத்துச் செறிவுகளைப் புகுத்தினார். திருக்குறளார் அப்படிப் புகுத்தப்பட்ட கருத்துச் செறிவுகளை ஒவ்வொரு குறட்பாவி னின்றும் பிழிந்தெடுத்து வெளிப்படுத்திக் காட்டும் பணியை, அரங்கச் சொற்பொழிவுகளின் மூலமாகவும், திருக்குறள் வகுப்பின் வாயிலாகவும், கட்டுரைகள் மூலமாகவும் நிறைவேற்றியுள்ளார். திருக்குறளார் அவர்கள் 1935-ஆம் ஆண்டு தொடங்கிய குறள் நெறிபரப்பும் பெரும்பணி இன்றளவும் தொடர்ந்து பல்வேறு வகைகளில், பல்வேறு வழிகளில், பல்வேறு இடங் களில், பல்வேறு மக்களிடையே, பல்வேறு விதங்களில், பல்வேறு சுவைகளுடன் வீறுநடை போட்டுக் கொண்டு வருகிறது. - அரண்மனைகளில் மட்டுமே மன்னர்கள் முன் னிலையில் தவழ்ந்து கொண்டிருந்த திருக்குறளை, ஆலமரத்தடிக்குக் கொண்டு வந்து பாமர மக்களின் முன்னிலையில் நடமாடச் செய்தவர் திருக்குறளார் ஆவார்கள். - பண்டிதர்களின் அரங்கிலே மட்டும் இடம் பெற்றிருந்த திருக்குறளை பாமரர்களிடத்தில் கொண்டு வந்து சேர்த்த வரும் அவரே ஆவார்கள். பண்டிதர்கள், அரைகுறையாகப் படித்தவர்கள், பாமரர்கள் ஆகிய அனைவர் முன்னிலையில் நின்று குறள்நெறியின் பேருண்மையையும், பெருஞ் சிறப்பை யும், பெரும் பயனையும் எளிமையாக எடுத்துச் சொல்லி, அவர்களையெல்லாம் செவிமடுக்க வைத்தார். நகைச்சுவை படச் சொல்வி எல்லோரையும் சிரிக்க வைத்தார்: நயம்படச்