பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v சொல்லி எல்லோரையும் சிந்திக்க வைத்தார்: நன்மைபடச் சொல்லி எல்லோரையும் செயலாற்ற வைத்தார். சென்ற நாற்பது ஆண்டுக் காலத்திற்கு மேலாகக் குறள் நெறிக் கருத்துக்களைத் தமிழகத்தின் நாடு நகரங்களிலும், சிற்றுார் பேரூர்களிலும், பட்டி தொட்டிகளிலும், பரப்பிய தோடல்லாமல், இந்தியத் துணைக் கண்டத்தின் பெரு நகரங்களிலும் அறிமுகப்படுத்திச் சிறந்த தமிழ்ப் பண்பாட்டை வளர்க்க, அரும்பாடுபட்ட திருக்குறளார் அவர்கள், என்றென்றும் போற்றுதலுக்கும் பாராட்டுத லுக்கும், வாழ்த்துதலுக்கும், வரவேற்றலுக்கும் உரியவர் ஆவார்கள். - - நாட்டுக்கு நல்ல தொண்டாற்றிவரும் திருக்குறளா ருக்குத் தமிழக அரசு தன் நன்றிக் கடனை உரிய முறையில் செலுத்த வேண்டும் என்ற விழைவை நானும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அருமை நண்பர் இராம. வீரப்பன் அவர்களும் கொண்டிருந்தோம். அந்த விழைவை மாண்புமிகு தமிழக முதல்வர், பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் ஏற்று, 1982 செப்டம்பர் 15-ஆம் நாள் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவில், தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்களின் பெயரால் அமைந்துள்ள விருதையும், பத்தாயிரம் வெண் பொற்காசுகள் அடங்கிய பொற் கிழியினையும் திருக்குறளாருக்கு வழங்க இசைவு அளித்தார் கள். அந்த விருதினையும் பொற்கிழியினையும், பெருந்தகை திருக்குறளாருக்கு வழங்கும் பேறு எனக்குக் கிடைத்தமையை எண்ணி எண்ணி நான் இறும்பூதெய்தினேன். கயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்பு பர்ராட்டும் உலகு" - என்னும் குறட்பாவின் கருத்துக்கு ஏற்ப நிகழ்ச்சி நடை .ெ ப ற் ற து: எம்போன்றோர்க்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. - II