பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. நூல்கள் பலவற்றையும் கற்றுவிட்ட மாத்திரத் தினால், உலகத்தோடு ஒட்டி வாழ்தல்’ வந்துவிடும் என்று கொள்ளுதல் ஆகாது. அப்பழக்கம் தனிப்பட்ட தொரு கல்வியென்றே கூறுதல் வேண்டும். கல்லாத வர்கள் என்பவர்களைக் குறைவாகப் பேசுவோம்ல கற்றவர்களைச் சிறப்பித்துச் சொல்லுவோம். கற்றி ருந்தும் கல்லாதவர்கள் இதுதான் உலகத்தில் பெருவழக்காகும் என்றாலும் பல நூ ல் க ைள க் கற்றிருந்தும் உலகத்தோடு பழகுவதைக் கற்காவிட்டால் அவர்களையும்கூட கல்லார் என்று கூறுவது தவறாகாது என்பதே. ஆசிரியரின் குறிப்பாகும். பெற்ற கல்விக்குப் பயன் அறிவினைப் பெருக்குதல் ஆகும். அந்த அறிவுக்குப்பயன் கல்லொழுக்கத்தினைப் பெறுதல் ஆகும். ஆதலால்தான் ஒழுக்கத்தினைப் பெறாதவர்கள் பல நூல்களைக் கற்றிருந்தாலும் கல்லாதவர்களாகவே கருதப்படுவர் என்பது கூறப் - - - . لقياس استاLJ உலகம் என்பது அடிக்கடி மாறும் தன்மை' யுடையது. அந்த மாறுதலுக்கு ஏற்ப கடந்து கொள்ளு. வதைத்தான் உலக்த்தோடு ஒட்ட ஒழுகல் என்று கூறினார்கள். பல நூல்களைக் கற்ற ஒருவன் காலத்தின் மாறுதலுக்கு ஏற்றபடி கடந்துகொள்ள, அறிதல் வேண்டும். நூல்களின் முறைகள் சில காரணங் . களினால் காலத்திற்கு ஒத்துவராது. இதனை அறிவுடைய மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள்.