பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சேர்ந்து வாழ்வதாகும்; இத்தகைய வாழ்வுதான் மேன்மையுடையது. , - மேலான வாழ்க்கை வாழ்வதற்குரிய பிறவி மனிதப் பிறவி என்பதனை நல்லறிவுடைய மக்கள் நன்கு அறிந்து அதன்படி நடப்பார்கள். இத்தன்மையினைப் பற்பலவாக வற்புறுத்திக் கூறவேண்டிய காரணங் களுண்டு. உலகத்துடன் இணைந்து வாழ்கின்ற பழக்கத்தினை, எளிதில் கற்றுக்கொள்ளவும் முடியாது. கண் போன்ற கல்வி அறிவினை வளர்க்கும் கற்றல் என்பது கண் போன்று சிறந்ததாகும். கற்றல் என்பது அறிவினை வளர்க்கும். கற்றல் என்பது அளவுடன் நிற்பது அல்ல. இவ்வாறு கல்வியினை என்றென்றும் புகழ்ந்தே கூறவேண்டும். கற்றல் என்பது மிகவும் விரிந்த பொருளையுடையதாகும். கல்வி என்பது ஒரு துறைப்பட்ட முறையில் மட்டும் அமைந்து விடுவது அன்று. அது பலவகைப் படும்; எண்ணில் அடங்கா, கற்றறியவேண்டிய நூல் களோ மிகப் பலவாகும். பல நூல்களைக் கற்றவர்கள் உண்டு. அத்தகைய கல்விமான்களும் உலகப் போக்கில் காலத்திற்கு ஏற்றபடி கடந்து கொள்ளும் பக்குவம் பெற்றிருக்க வேண்டும். - முதன்மையானது * அந்த அறிவினைத்தான் முதன்மையான அறிவு என்று கூறுவார்கள். உயர்ந்த மக்கள் வாழ்ந்து வகுத்துக் காட்டும் முறையில் செல்லுவதைத்தான் கஉலகத்தோடு ஒட்டி வாழ்தல் என்ற பொருளில் வழங்குகிறார்கள். - - -