பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தனித்து வாழாமை ஒத்து வாழ்தல் உலகில் வாழும் மக்களுடன் ஒத்து வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவ்வாறு இல்லாவிட்டால் வாழ்தல் பயனற்றதாகிவிடும் என்பது வெளிப்படை யான உண்மையாகும். உலகில் கணக்கிட்டுப் பார்க்கும் பொழுது மக்கள் இனத்தை அழிக்கக்கூடிய கொடுமை களாகப் பலவற்றைக் காண்கின்றோம். அவைகளுள்ளே பதர் போன்ற மக்கள் எவ்வளவு தீமையானவர்கள் என்பதை வெறுக்கப்பட வேண்டியவர்கள் என்ற குறிப்பு உணர்த்திற்று. - தனித்து வாழ்தல் என்பது மக்கட்பிறவிக்கு ஏற்ற தன்று. இககருத்து பற்றியே பற்பல உண்மைகளை ஆசிரியர் கூறி வைக்கின்றார். உலக மக்களோடு ஒத்து வாழத் தெரியாதவர்கள் உலகத்தில் வாழும் உரிமைக்கு தகுதி உடையவர்கள் அல்லர். சிறப்பு வாழ்க்கை உலகத்தில் வாழ்தல்’ என்பது மக்களுக்கென்றே யுரிய சிறப்புடன் வாழ்தல்’ என்பதைத்தான் குறிக்கும். சற்று விளக்கமாகக் கூறப் புகுந்தால் உலகத்தோடு பொருந்தி வாழ வேண்டும் என்பதாகும். அந்தப் பழக்கம் சிறந்த முதிர்ந்த அறிவுடையோர்களால்தான் முடியும். - அறிவின் உண்மையினை அறிந்தவர்கள் உலகத் தோடு ஒட்டி வாழத் தெரிந்தவர்களாவார்கள். உலகத் துடன் ஒட்டி வாழ்தல் என்பது உலக கடைமுறை யினைப் பின்பற்றி வாழ்தலாகும்; உலகப் போக்கில் கலந்து வாழ்வதாகும்; உலக மக்களுடன் இணைந்து