பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சிறந்த மனப்பண்பு மனப் பண்பு முதலிடம் பெறவேண்டும் என்பதைத் தான் மனிதப் பண்பாட்டில் பல இடங்களிலும் ஆசிரியர் கூறுகின்றார். மேலோங்கி வளர்ந்து செல்லவேண்டிய மனித வாழ்க்கை தடைப்பட்டு கின்றுவிடுதல் கூடாது. மனிதன் என்றென்றும் இகழ்ச்சிக்கு ஆளாதல் ”. - - - - . لIT G سiمهاFة கல்வி கேள்வி அறிவு பெற்றிருந்தும் மேலாகப் பேசப்படும் மனிதப் பண்பு இல்லாமலிருந்தால் அனைத்துமே உயிரற்ற உடல்போல் ஆகிவிடும். மனப் பண்பாடு உலக மக்களால் பாராட்டுவதற்கு இடம் தேடித் தரும். - M - உலக மக்கள் இகழ்ந்து சொல்லுமாறு செய்வதைப் பயனில் சொற்களில் வைத்துக் காரணமாகக் காட்டி னார். பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப்படும்.” - - இக்குறட்பா பயனில்லாத சொற்களைப் பேசும் அறிவற்றவனின் நிலைமையினைக் குறித்தது. எல்லோ ராலும் இகழப்படுபவன் மக்களிடையே வாழ்வது இழி கிலை என்பது பெறப்பட்டது. r - பல்லார்’ என்பதை அறிவுடைய மக்கள்’ என்று கொள்ளுதல் சிறப்பானதாகும். ஆனால் இகழ்வார்கள் என்பதைக் குறிக்கும்பொழுது அச்செயல் அறிவுடைய மக்கள், அறிவில்லாத மக்கள் ஆகிய எல்லோராலும் முடியும் என்பதற்காகத்தான் எல்லாரும் என்ற சொல் கூறப்பட்டது. - வ.-4