பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பலரும் கோபப்படுவர் அறிவுடைய மக்கள் பலரும் பயனிலாத சொற்கள பேசுபவர்களை எளிதில் புரிந்துகொள்வார்கள். அப்படிப் - பட்டவர்களை வெறுத்து விலக்குவார்கள், வெறுத்து. நீக்குவார்கள் என்பதைத்தான் முனியப் பயனில: சொல்லுவான்’ என்பதாகக் கூறினார். நிலைத்து கின்று புகழ் தேடி வாழவேண்டிய மனிதப் பிறவி எவ்வாறு கெடுதிக்குள்ளாக்கப்படும் என்பதெல்லாம் உய்த்துணர வேண்டியதாயிற்று. சொற்கள் பேசுவதில் மிகமிக விழிப்புடன் இருத்தல் வேண்டும். • * , பொருள் நிறைந்த சொற்களைப் பேசும் பழக்கம் அளவோடு பே சு கி ன் ற அரிய பழக்கத்திற்கு, வழிகோலும்; குறைந்த சொல் பேசுபவர்கள் கிறைந்த ஆற்றலினைப் பெறுவார்கள். ஆற்றல் மிகுதி செயல் முறைக்கு வழிவகுப்பதாகும். ஆதலால், பயனில்லாத சொற்கள் வேறு பற்பல தீமைகளுக்கு அடிப்படையாக் நிற்பதாகும். - உலகமக்களால் இகழ்ந்து பேசப் படுகின் ற நிலையினை தாமே வரவழைத்துக் கொள்கின்ற தன்மை பயனற்ற சொற்களைப் பேசுபவர்களிடத்தில் காணப் படுகிறது. எல்லாரும் எள்ளப்படும் என்று ஒரு குறட்பா முடிகின்றது. - - இகழ்ந்து பேசுகின்ற பழக்கத்தினை எல்லோரும் எளிதில் கொள்ளுதலாகும்என்பது குறிப்பு. அறிவுடைய மக்களால் வெறுக்கப்படுவான் என்றும், எல்லோராலும் இகழப்படுவான் என்றும் ஒரு வகையில் பிரித்துக்காட்டி குறட்பா கருத்தினை அமைக்கின்றது. -