பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 பயனில்லாத சொற்கள் பலராலும் வெறுக்கப்படும் ஆதலால், அவ்வாறு பேசுகின்றவனும் வெறுக்கப்படு வான். பலராலும் வெறுக்கப்பட்டாலும் பயனிலாத சொற்களைச் சொல்லும் பழக்கமுள்ளவர்கள் உணராம லும் இருப்பார்கள். அவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாகின் றார்கள் என்பது உறுதியான உண்மையாகும். பிறரால் இகழ்ந்து எள்ளப்படுவான் அப்படிப்பட்டவன் எள்ளப்படுவான்’ என்று ஆசிரியர் குறிக்கின்றார்; அதாவது இகழப்படுவான் என்பதாகும். புகழப்பட வேண்டிய மனிதப் பிறவி எடுத்தவன் இகழப்படுவானேயானால் அவன் பெற் றிருக்கும் பிறவி மனிதப் பிறவியாகாது. . . இகழ்ச்சி என்பது ஒருவனுக்கு உண்டாவதற்குக் காரணங்கள் உண்டு. சிலரால் இகழப்படுபவன், பலரால் இகழப்படுபவன் என்றும் பாகுபடுத்திக் கூறலாம். பயனில் சொல் பழக்கமுள்ளவனைப் பலரும் இகழ்வார்கள் என்பது குறிக்கப்பட்டது. பலரும் வெறுக்கக் கூடிய சொற்களைச் சொல்லு பவனை எல்லோரும் இகழ்ந்து பேசுவார்கள் என்று ஆசிரியர் வள்ளுவனார் அமைத்துக் காட்டினார். பய ளிைலாத வார்த்தைகளைப் பேசுபவன் வெறுக்கப்படு வான் என்பது மட்டுமல்லாமல் பிறர் கோபத்துக்கு ஆளாவான் என்று கூறுதலும் மிகையாகாது. • . . . . . . . . . வெறுக்கும் தன்மை கோபத்திற்கு ஆளாக்கும் என்பது இயல்பான தன்மையாகும். பல்லார் முனியப் பயனில் சொல்லுவான்’ என்று குறளடிச் சொற்கள் வருகின்றன. r - -