பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 லார்’ என்று குறட்பா தொடங்கப் பெற்று மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்” என்று முடிகின்றது. மருள் தீர்ந்தால் மாசறு காட்சிதோன்றும் என்பது வெளிப்படையாகும். இருள் நீங்கி ஒளி வீசுவதை அஞ்ஞானம் நீங்கிய அறிவின் விளக்கத்திற்குக் கருத் தாகக் கூறப்படும். மனத்திலுள்ள அஞ்ஞானம் பயனில் லாத வார்த்தைகளால் பெரிதாக்கப்படும். பயனுள்ள வார்த்தைகள் மெய்ஞ்ஞான அறிவினை எடுத்துக் காட்டும். ஆதலினால் அறிவு நிறையப் பெறுதலே மக்கட் பிறவிக்கு ஏற்றதென்ற உண்மை எளிதாகப் பேசப்பட்டது. * - பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த-மாசறு காட்சி யவர் என்ற குறட்பாவில் அடங்கிக் கிடக்கும் நுண்ணிய பொருட்செறிவு சிந்திக்கத்தக்கது. உலகியல் வழக்கில் பெரிதும் பின் பற்ற வேண்டியதாகும். பயனிலாத சொற்களைப் பேசிப் பழகுபவர்களுக்கு அப்பழக்கம் நோய் போன்ற தாக அமைந்துவிடுகின்றது. அப்பழக்கம் அவ்வாறு பேசுகின்றவனுக்குத்தான் தீங்கினை உண்டாக்கும் என்று சொல்லி கிறுத்துதல் கூடாது; மற்றவர்கட்கும் துன்பத்தினைக் கொடுப்பதாகும். மக்கள் எல்லோருமே அவனை எள்ளி ககையாடு வார்கள் என்பது குறிப்பு. பலராலும் இகழ்ந்து பேசப் படும் நிலைக்குப் பயனில்லாத சொற்களை சொல்லு பவன் ஆளாகியிருப்பான். அத்தகைய ஒருவனை அறி வுடைய மக்கள் மட்டும்தான் இகழ்ந்து பேசுவார்கள் என்பது அல்ல. அறிவு நிறையாத மக்களும் அத்தகைய ஒருவனை வெறுத்து ஒதுக்கிவிடுவர்.