பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 யாவார்கள் என்று சொல்லப்பட்டது. இக்குறட்பா சிந்தனைக்குரிய செய்திகள் பலவற்றையும் அடக்கிக் கொண்டுள்ளது. .உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்-கல் லார் அறிவிலாதார்.’ - உலக மக்களோடு காலத்திற்கேற்ப, இடத்திற் கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, அவ்வப்பொழுது காணப் படும் மாறுதலுக்கேற்ப நடந்து கொள்ளுதல் என்பது எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை சுருக்கத்தில் அமைத்துக் காட்டினார். - - அறிவு கிறைந்தவர்கள் எப்பொழுதும் உலகத் தோடு பொருந்தி வாழ்வார்கள்; அறிவில்லாதவர்கள் அவ்வாறு வாழமாட்டார்கள். பல நூல்களைக் கற்ற பலரும் உலகத்தோடு ஒட்டிப் பழகவும் கற்றிருப்பார்கள் என்று பேசப்படுகின்ற எண்ணம் உறுதியாக்கப்பட வில்லை. - - கல்வியை மட்டும் பெற்றிருத்தலினால் உலகத் தோடு ஒழுக வேண்டிய முறை இயல்பாகவே வந்து விடும் என்று கூறுவதற்கு இல்லை. அதற்கென்றே தனிப்பட்டதொரு அறிவும் ஆற்றலும் தேவை என்கின்ற எண்ணம் மெய்ப்பிக்கப்பட்டது. பன்முறையும் சிந்திக்கவேண்டிய குறிப்பினை பல கற்றும் கல்லார்’ என்ற சொற்களினால் விளக்கிப் பேசினார். - உயிரினும் மேலான ஒழுக்கமே துணை

  • உலக வாழ்க்கை’ என்பதுதான் என்றென்றும்

ஒருவன் உள்ளத்தில் உறுதியாக இருக்க வேண்டிய தாகும். அந்த வாழ்க்கையினை கடத்துவதற்காகத்தான்