பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 ஏனைய பலவும் துணையாக இருத்தல் வேண்டும். பொதுப்படக் கூறுகின்றபொழுது ஒழுக்கம் என்பதனை உயிரினும் மேலானதாக மக்களுக்குக் கூறுவதுண்டு. அந்தக் கருத்தினையும் பொருளாகக் கொண்டுதான் ஒட்ட ஒழுகல்’ என்றும் அமைத்தார். மக்களோடு பொருந்தி இணைந்து வாழ்தல் என்பதனை ஒட்ட என்கிற சிறிய சொல் குறிப்பதாகும். ஆதலால் கற்றல் என்பதனை இரண்டாகப் பிரித்துக் கூறுவதுபோல, வகைப்படுத்திக் காட்டி பல நூல்களைக் கற்றல் என்பதும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதனைக் கற்பதுமாக பேசப்பட்டது. அறிவின் அடிப்படையே அனைத்தையும் தாங்கி கிற்கும் என்பது உணர்த்தப்பட்டது. உலகப் போக்கு அறிவுதான் உலகத்தோடு ஒட்டி ஒழுகலினை ஒருவருக்குத் தரும் என்பதனை சிந்திக்கின்றபொழுது உய்த்துணர வேண்டிய உண்மையொன்று அறியக் கிடக்கின்றது. ஒருவன் தான் வேறு, உலகம் வேறு: என்று எக்காலத்திலும் எண்ணுதல் கூடாது. உலகப் போக்கு என்பது உயர்ந்தோர் செல்லும் வழி என்ற பொருளில்தான் அமைந்துள்ளது. மனிதன் நிறைந்த கல்வி பெற்றிருத்தல் முடியும்-நிறைந்த செல்வமும் பெற்றிருத்தல்கூடும். பல துறைகளிலும் வலிமையும் செல்வாக்கும் பெற்றிருப்பவர்களும் உண்டு. இயல்பாக வாய்க்கப் பெற்றுள்ள பலவகையான திறமைகளினால் எக்காலத்திலேயும் எவ்விடத்திலேயும் எண்ணியது எண்ணியபடியே சாதிக்க முடியும் என்று