பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,60 கருதுபவர்களும் உண்டு. ஆதலால், உலகம் எந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அந்த முறையிலேயே கடந்து செல்வதுதான் அறிவு பெற்றிருப்பதற்கு அடையாளமாகும். அறிவே உணர்த்தும் உலகம் எவ்வாறு கடந்து கொண்டிருக்கிறது என்பதனை அறிவுடையவர்கள்தான் புரிந்துகொள்ளு வார்கள். அறிவுதான் இந்த உண்மையினை எடுத்து விளக்கிக் கூறும். உலகம் என்பது சுருக்கமாக விளக்கிக் காட்டப்படும் ஒன்று அன்று. உலகில் வாழ்பவர்களும் ஒரே விதமான வாழ்க்கையினை உடையவர்களும் அல்லர். . ஆட்சி செலுத்தும் தலைவர்கள் முதல் அன்றாட வாழ்க்கையினைத் துன்பப்பட்டே கடத்தும் மக்கள் வரை இக்த உலகில் வாழ்க்கை அமைத்து வாழ்கின் றார்கள். பற்பல இடங்களிலிருந்து வாழவேண்டிபவர் களும் உண்டு. பலவகையான தொழில்கள் செய்பவர் களும் உண்டு. ஆட்சி காரணத்தினால் மாறுதல்கள். ஏற்படுவதும் உண்டு. - எனவேதான், உ ல க ம் அடிக்கடி மாறுதல் அடைதல் கூடும் என்பது இயல்பாயிற்று. அப்படிப் பட்ட உலகத்தில் அவ்வப்பொழுது உலகம் எந்தவிதத் தில் நடந்து போகின்றதோ அந்த விதத்தில் கடந்து கொள்ளுவதே அறிவுடைமையாகும். எவ்வது உறைவது உலகம்’ என்று குறட்பா ஒன்று தொடங்குகின்றது. இந்த உலகமானது எந்த விதத்தில் நடந்து வருகின்றதோ என்பதே இதற்குப் பொருளாகும்.