பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? அறிவின் சிறப்பு அளவிடற்கரிது சுருக்கமாகக் கூறப்பட்ட இச்சொற்களுக்குள்ளே எவ்வது என்பது பொதிந்து கிடக்கும் உண்மை யினைப் பெற்றிருக்கின்றது. எக்காலத்திலும் ஒரே மாதிரியாக உலகம் கடந்து வராது என்பதனை இது உணர்த்திற்று. - அந்தந்தக் காலங்களில் உலகம் எவ்வாறு கடக் கின்றதோ என்கின்ற உண்மையினைச் சொல்ல வந்து ஒஎவ்வது உறைவது உலகம்’ என்று கூறினார். அவ்வாறு கூறி அக்குறட்பாவினை உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு” என்று முடித்தார். உலகம் அமைந்து கடக்கும் முறையும், அந்த உலகத்தோடு அமைந்து நடக்கவேண்டிய முறையும் அறிவுடைமையால் அறிந்து கொள்ளமுடியும் என்பதா யிற்று. எவ்வது உறைவது என்ற குறிப்பும்.அவ்வது உறைவது என்கிற குறிப்பும் எளிமையாக உண்மை யினைப் புலப்படுத்தின. - உயர்ந்தோர் என்று கூறப்படுகின்ற உலக மக்களைக் கொண்ட உலகம்:நடக்கின்ற விதத்தினை எவ்வது உறைவது உலகம்’ என்பதால் குறிப்பிட்டார். அந்த உலகத்தோடு அதற்கு ஏற்றபடி கடந்து கொள்ளுவதுதான் அறிவுக்கு அழகு என்பதைச் சுட்டிக் காட்டி அவ்வது உறைவது” என்பதால் குறித்தார். எவ்வது என்பதும் அவ்வது என்பதும் இரண்டு பெரிய தன்மைகளைக் குறித்து கின்றன. அதுவே போல உறைவது உலகம் என்பதும் உறைவது அறிவு என்பதும் இரண்டு பெரிய தன்மைகளை உணர்த்தின. - - -