பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அறிவாகிய கருவி போற்றி வளர்ப்பதாகும் உலகத்துடன் உறைந்து போவது என்பதுதான் தலையாய கடமையாகும். நுட்பமான அறிவுத் திறமை உள்ளவர்கள்தான் இவ்வாறு கடந்து கொள்ளுவார்கள். இதனையறியாதவர்கள் அறிவு பெறாதவர்கள் ஆவார் கள். அறிவு என்பது எல்லாக் காலத்திலேயும் எல்லா வற்றையும் ஒருவனுக்குக் கொடுக்கும் கருவியாகும். அந்த அறிவாகிய கருவியினைப் போற்றி வளர்க்கும் மக்கள் புகழ்டன் வாழ்வார்கள். உலகம் என்பதைப் பேசுகின்றபொழுது அத்துடன் அறிவு என்பதனை இணைத்து வைத்துப் பேசுவதால் அறிவின் மேன்மை உணர்த்தப்பட்டது. கல்வி கேள்விகளைப் பெற்றிருந்தாலும் அந்தந்தக் காலத்தில் உலகத்துடன் கடக்கவேண்டிய அறிவினைப் பெற்றிருத்தலே சிறப்பு என்பது வற்புறுத்தப்பட்டது. பரந்து விரிந்தது அளவிட்டுக் கூறிக் குறிப்பிட்ட விளக்கத்துடன் கணக்கிட்டுக் காட்டப்படுவது அறிவு ஆகாது. பரந்து விரிந்து நிலவி வருகின்ற உலகம்போல அறிவும் குறிப் பிட்ட எல்லைக்குள் முடிவிட்டுப் பேசப்படுவது அன்று. ஆதலால்தான் அறிவின் திறத்தினையும் உயர் வினையும் பேச வந்த ஆசிரியர் வள்ளுவனார் மிகத் தெளிவாக அதனைப் பற்பல இடங்களில் அமைத்து வைத்து விளக்கிச் செல்லுகின்றார். பல நூல்களைக் கற்று அறிவினை வளர்த்துக் கொள்ளுவது முறையே யாகும்.