பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 நூல் வழிகளினால் பெற்ற அறிவு சிறந்து விளங்கு வதுமாகும். ஆனால் அந்த ஒன்றினையே முழுமையு மாக வைத்துச் செயற்படுதல் அறிவுடைமையாகி விடாது. t - நூலறிவினைப் பெற்றிருந்தாலும் அவ்வப் பொழுது உலகம் கடந்து செல்லுகின்ற கிலைமைக்குப் பொருந்துமாறு ஒழுகுதல் வேண்டும். அவ்வாறு உலக வழியோடு அறிந்து கடத்தலே அறிவுடைமைக்குப் பொருந்துவதாகும். - - நூல் வழியில் மட்டும் கின்று கற்றதனால் ஏற்பட்ட பயனைக்கொண்டு உலகத்திற்குப் பொருந் தாத முறையில் செயல்படுபவர்களும் உண்டு. அப்படி கடந்தால் உலகம் பழிக்கும். - ஆதலால்தான், உலகத்தோடு பொருந்த நடந்து கொள்ளுதலே அறிவு பெற்றிருப்பதற்கு அறிகுறி. யாகும். உலகத்தின் நடைமுறைகளை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரித்து அவைகளைச் செயற்கை, இயறகை என்று கூறுகின்றார். . . . . செயற்கை இயற்கை சிந்தனைக்குரியன நூல்களைக் கற்றதனால் உண்டாகியிருக்கும். அறிவினைச் செயற்கையென்றும் உலகத்திற்கு, காலத்திற்கேற்றபடி கடந்து கொள்ளுவதை இயற்கை யின்பால் வைத்தும் கூறுகின்றார். உலகத்து இயற்கை என்று குறட்பாவில் அமைத்து உலகில் அவ்வப்போது நடக்கின்ற இயற்கைத் திறங்களைக் கண்டு அதன்படி செயலாற்ற வேண்டுமென்கிறார். நூல்களைக் கற்றதனால் ஏற்பட்ட அறிவின் பயனைக் குறையானதாக ஆசிரியர் கூறினாரில்லை.