பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 உலகம் அவ்வப்பொழுது பல துறைகளிலும் பல காரணங்களினாலும் மாறுதல் அடையும் தன்மை யுடையதாகும். ஆதலால்தான் உலகத்தின் இயற்கைத் தன்மையினை அறிந்து அதனை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ப கடந்து கொள்ளுதல் வேண்டும். உலகத்து இயற்கை அறிந்து செயல்’ என்பதாகக் குறட்பா ஒன்று முடிகின்றது. இந்த ஆற்றலினை பற்பல நூல்களைக் கற்றுவிட்டதனால் மட்டும்பெற்று விடமுடியாது. இயல்பாக உள்ள அறிவின் திறத்தி னால்தான் இந்த ஆற்றலினைப் பெறுதல் முடியும். ஆதலால்தான் இந்த அறிவு மேலானதாகக் கூறப்பட்டது. செயலில் ஈடுபட்டுத் தொழில் புரிபவர் கள் உலகத்தினைத் தெரிந்து கடந்து கொள்ளுதல் வேண்டும். நூல்களின் அறிவினை கன்றாகப் பெற் றிருப்பவர்களைப் பார்த்து, செயற்கை அறிந்தக் கடைத்தும்’ என்று ஆசிரியர் கூறுகின்றார். இரண்டில் சிறந்தது செயற்கை’ என்பது நூலறிவினால் செயல்படும் தன்மையினைக் குறிப்பதாகும். அவ்வப்பொழுது உலகத் தன்மையினை அறிந்து கடந்து கொள்ளும் பாங்கினை நூல்கள் தந்துவிடாது என்பதும் குறிப்பு, நூல்களின் அறிவே போதும் என்று முடிவு கட்டி இருத்தல் தகாது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியே அறிந்தக் கடைத்தும் என்று அமைத்துக் காட்டினார். குறட்பாவினையும் நன்கு சிந்தித்தல் வேண்டும். செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து-இயற்கை அறிந்து செயல்.