பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 இக்குறட்பா கல்ல தொழில்களினை மேற்கொண்டு செய்லபடுவோர்களுக்குச் சிறப்பாகக்கூறப்பட்டதாகும். உலக மக்களிடையே இயல்பாக இருந்து வரும் எண் னத்தினை முன்னே கிறுத்தி வைத்து அதற்கு மாறாக நிலவ வேண்டிய உண்மை வழியினை எடுத்துக் கூறினர்ர். -- - - ஒருவன் நூல்களில் கற்றறிந்த வழியினை மேற். கொண்டு கடப்பானேயானாலும் அவ்வழி காலத்தினால் உலகத்திற்குப் பொருந்தாததாக இருத்தல் கூடும். அப்படிச் செய்வானேயானால் உலக மக்களால் பழிக்கப் படும் நிலைமைக்கும் அவன் ஆளாக நேரிடும். ஆதலால்தான் உலக இயற்கையினைத் தெரிந்து, செயல்பட வேண்டும்’ என்று கூறப்பட்டது. நூல்வழி அறிவும் உலகவழி அறிவும் கநூல்வழி' என்பதும் உலக வழி என்பதும்" தெளிவுபடுத்தப்பட்டது. நூலறிவினால் அறிந்து கடப்பதை செயற்கை அறிதல்’ என்றும், உலகத்தோடு பொருந்துமாறு கடந்து கொள்வதை இயற்கை அற். தல்’ என்றும் விளக்கிக் கூறினார். ". . . - நூல்களின் சிறப்பினை அறிந்து கொள்ளுதல் என்பது எளிதானதல்ல. ஆனால் அக்கருத்துக்களை உணர்ந்து கொள்ளுதல் முடிவானதும் அல்ல. நூலறிவே எல்லா காலத்திற்கும் துணையாக கிற்கும் என்று நம்புதலும் அறிவிற்குப் பொருந்தாததாகும். நூல்கள் பலவற்றைக் கற்பதும் ஏனைய பயிற்சி களைப் பெறுவதும் ஆகிய எல்லாம் உலகத்தில் வாழ் வதற்கே யாகும். ஆதலால்தான் உலகத்தோடு, பொருந்தி வாழ்வதை முதன்மையாக வைத்தார்.