பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 நூல் பல கற்றல் நூல்களைக் கற்பது மிகவும் சிறப்புடையது என்கிற எண்ணத்தினைப் பல இடங்களிலும் திருவள்ளுவர் தெளிவுபடுத்திக் கூறுகின்றார். நூல் பல கற்பினும் என்று கூறுகின்ற இடத்தில் உயர்வு சிறப்பாக உம்' என்பதனை அமைத்துக் காட்டினார். கற்றல் என்பது பற்பல நூல்கள் கற்பதேயாகும் என்பதும் சிறப்பிக்கப்பட்டது. கற்கப்படுகின்ற நூல்களெல்லாம் நுட்பமான கருத்துக்களைப் பெற்றிருப்பதாகும் என்று கூற முடியாது. நுட்பம் நிறைந்த நூல்களைக் கற்றால் தான் நுண்ணிய அறிவு பெறுதல் முடியும். ஆதலால் தான் நுண்ணிய பல நூல்களைக் கற்றல் மிகவும் சிறப்புடையதாகும் என்பதனைச் சிறப்பித்துக் கூறவே :நுண்ணிய நூல் பல கற்பினும் என்று கூறி வைத்தார். - இயற்கையின் வலிமை கூர்மையான புத்தியுள்ளவர்களே நுண்ணிய நூல் களைக் கற்க முடியும். இயற்கையின் வன்மையினைப் பற்பலவிடத்தும் பற்பல முறைகளில் ஆசிரியர் வள்ளு வனார் கூறி வருகின்றார். இயற்கையின் வழிமுறையினைக் கூறுகின்ற பொழுது காரணப் பெயராக அமைத்து ஊழ் என்றும் கபால்’ என்றும் விதி' என்றும் உண்மை’ என்றும் *இயற்கை என்றும் ஒரே கருத்தில் வைத்துக் கூறுகின்றார். -