பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 ஊழ் என்பதனை இயற்கை என்னும் பொருளில் அமைத்து இருவேறு உலகத்து இயற்கை என்று தொடங்கப் பெறும் குறட்பாவில் தெளிவுபடுத்து கிறார். - - -

இயற்கை என்பது எல்லாவற்றையும்விட வலிமை மிகுந்தது என்பது உடன்பட வேண்டிய கருத்தாகும். கற்றறிதலை செயற்கை என்றும் இயல்பாக அமைக் திருப்பதை இயற்கை என்றும் கூறுவது குறட்பாவின் கருத்தாகும். . .

இயற்கையால் ஏற்படுவது எப்பொழுதும் நன்மை பாகவே முடியும் என்று கூறுதல் இல்லை. கன்மைக்கும் தீமைக்கும் பொதுப்படையாக அமைந்திருப்பது இயற்கையின் செயலாகும். இயற்கையாகவே ஒரு வனுக்கு அறிவு அமைக்கப் பெற்றிருந்தால் அந்த அறிவு அவன் கற்றிருக்கின்ற பல நூல்களின் பயனுக்கு மேலாக நிற்கும் என்பது குறிப்பாகும். மேம்படுதல் நுட்பமான பொருள்களையுடைய பல நூல்களை யும் ஒருவன் கற்றிருந்தாலும் அவைகளையெல்லாம் விட அவனுக்கு இயற்கையினால் உண்டாகியிருக் கின்ற அறிவே மேற்பட்டு நிற்கும் என்பதாகும். இயற்கையினால் ஏற்பட்டிருக்கும் அறிவினை உண்மை அறிவு என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். குறட்பா ஒன்றில் அமைத்துக் காட்டும்பொழுது தன் உண்மை அறிவு” என்று விளக்கிக் கூறும் முறைமை சிந்திக்கத் தக்கதாகும். -