பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புமிகு அமைச்சர் இராம. வீரப்பன் அவர்கள் பாராட்டுரை ஒப்புயர்வற்ற திருக்குறளின் சிறப்புக்களை, திருக்குறள் காட்டும் வாழ்க்கை நெறிகளை, எண்ணி எண்ணி மகிழும் இலக்கிய நயங்களை, சாதாரண-எளிய, பாமரரும் உணரும் வகையில் எடுத்து விளக்கிடும் பணியை, கடந்த நாற்பது ஆண்டுகட்கு மேலாகத் தமிழறிஞர் திருக்குறளார் மு னிசா மி அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். - ... " 'திருக்குறள் என்றால் புலவர்களும் படித்தவர்களும் மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டிய நூல் என்றிருந் ததை எழுதப் படிக்கத் தெரியாதவரும் புரிந்து கொள்ளும் வகையில், சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, சிந்தனையைத் துரண்டி, குறளைப் பரப்பும் மகத்தான பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் திரு. முனிசாமி அவர்கள். - அவருடைய ஆற்றல் மிக்க தமிழறிவும், திருக்குறள் மீது அவர் கொண்ட அ ள வ ற் ற பற்றும், நாடெங்கும் திருக்குறளை முழங்கச் செய்த மகத்தான தொண்டும் அவருக்குத் திருக்குறளார்', 'திருக்குறள் முனிசாமி" என்ற சிறப்புப் பட்டங்களை ஈட்டித் தந்தன. திருக்குற ளார்' என்றாலே திரு. முனிசாமி அவர்களைத்தான் குறிக்கும் என்ற சிறப்பே, தமிழகம் ஏன் இந்தியத் துணைக் கண்டம் அவரைப் பாராட்டிக் கொண்டிருப்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். - வாழ்நாள் முழுதும் பல்லாயிரக்கணக்கான சொற் பொழிவுகளின் மூலமும், கட்டுரைகளின் மூலமும் எடுத் துரைத்து வந்த ஆராய்ச்சிக் கருத்துக்களை ஒன்றாகத் திரட்டி உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்" என்ற பெயரில் நூலொன்று உருவாக்கியுள்ளார்கள். திருக்குறளுக்குப் பல அறிஞர்களால் உரை வழங்கப்பட் டிருக்கிறது. ஆனால் திருக்குறளார் தந்துள்ள் உரை விளக்கம் அவருக்கே உள்ள் சிறப்புமிக்க ஆற்றலின் அடிப் படையில் வழங்கப்பட்டிருப்பது இந்நூலின் சிறப்பாகும்.