பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 பொருளினைக் கொண்டு மட்டும் பெருமை சிறுமை கயினைக் காட்டுதல் கூடாது என்பதும் குறிப்பால் உணர்த்தப்பட்டது. கருமமே என்று கூற வந்த ஆசிரியர் தம்தம் கருமமே என்றும் குறித்துக் காட்டினார். - மற்றவர்கள் செய்கின்ற செயலைக் கொண்டோ *உறவின் முறையார் செய்கின்ற செயலைக் கொண்டோ பெருமை சிறுமையினை ஒருவன்பால் கண்டு கொள்ளுதல் கூடாது. அவரவர்கள் செய்கின்ற செயல்கள்தான் அவரவர்களின் பெருமைக்கும் சிறுமைக்கும் காரணமாக இருத்தல் வேண்டும். உரைகல் உரைகல் என்பது ஒன்று உண்டு. இதனையே கட்டளைக்கல் என்றும் சொல்லுவார்கள். பொன்னின் தன்மையினை அல்லது மாற்றினை அறிய வேண்டு மானால் அப்பொன்னினை உரைகல்லில் உரைத்துப் பார்க்கவேண்டும். அந்தப் பொன்னின் தன்மையினை எடுத்துரைப்பதால் அதற்கு உரைகல் என்ற பெயரும். வந்தது. இதனைத்தான் கட்டளைக்கல்’ என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். குணநலன்களை அறுதியிட்டுக் கூறுவதால் ஆகட்டளைக்கல் பயன்பட்டது. இக்கட்டளைக் கல்லின் அருமையினை நன்கு புரிந்துகொள்ளுதல் வேண்டும். இந்த உரைகல் இல்லையென்றால் சிறப்பான பொன் எது என்று அறிதல் முடியாது. பொன்னைப் போன்று தோற்றமளிக்கின்ற மற்றவைகளைக் கண்டு ஏமாற்ற