பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தான் அளந்து பார்த்தல் வேண்டும். ஒருவர் செய்கின்ற தொழிலினைக் கருமம் என்று கூறுதல் மரபு. ஒருவர் அந்தக் கருமம் செய்கின்றார் என்றால் அவர் எப்படிப்பட்ட செயலைச் செய்கின்றார் என்பதே பொருளாகும். கருமம்" என்பது ஒழுக்கத்தினையும் மனிதப் பண்பாட்டினையும் எடுத்துக் காட்ட எழுந்த சொல்லாகும். மனிதப் பிறவி எடுத்தவர்கள் செய்ய வேண்டிய கருமம் அல்லது தொழில் என்பதற்கு அளவு உண்டு. - - செயல்களே அளவுகோல் மனிதப் பிறவிக்கு அடாத தொழிலையும் ஒழுக்கம் குறைந்த செயலினையும் அவர்கள் செய்தல் கூடாது. செய்யும் தொழிலினை அளவுகோலாகக் கொள்ளாமல் மற்றவைகளைக் காரணங்களாகக் கொண்டு உயர்வும் பெருமையும் தேடிக்கொள்ள எண்ணுபவர்களும் உண்டு. அப்படி எண்ணுவது தவறாகும். - கருமமே என்ற சொல்லினை ஒரு குறட்பா பெற் றிருக்கின்றது. இச் சொல்லில் ஏகாரம் கூறப்பட்டிருப் பதைச் சிந்தித்தல் வேண்டும். கருமம் என்று மட்டும் கூறாமல் கருமமே என்று கூறியதால் தனிச்சிறப்பு விளக்கப்பட்டது. . r - - பெருமையைத் தேடுபவர்கள் பெருமையான ஒழுக்கம் சிறந்த செயல்களைக் கொண்டுதான் அப் பெருமையினைத் தேடுதல் வேண்டும். வேறு எதுவும் பெருமைக்குக் காரணமாக இருக்க முடியாது. அதுவே போன்று ஒழுக்கம் குறைந்த தொழில்கள்தான் காரணமாகும்.