பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 உவமையாகக் காட்டினார். உலக வாழ்க்கை என்பது மிகவும் விழிப்புடன் கடந்து கொள்ள வேண்டியதாகும் என்பதற்கு இக் கருத்து கல்ல எடுத்துக்காட்டாகும். அறத்தைச் செய்பவர்களைச் செவ்வியர் என்று கூறுதல் வேண்டும்; அதுவே போல இன்பத்தைச் செய்கின்ற யாழினது செயலும் செவ்விது என்று கூறப்பட்டது. கூடா ஒழுக்கம் உடையவர்கள் கொடியவர்களென்று கூறப்படுவர். மதிக்கப்படவேண்டியது செயலேயன்றி தோற்றம் அல்ல. வேடத்தினால் மதிப்பினைப் பெறுதல் என்பது அறிவுடைமையாகாது. உலகில் உயர்ந்தவர்கள் தாழ்க் தவர்கள் என்று பேசப்படுவதைக் காணுகின்றோம். உயர்வும் தாழ்வும் கணக்கிட்ப் படுதல் வேண்டுமென் றால் அதற்குரிய வழியினை ஆசிரியர் எளிமையாகக் கூறுகின்றார். பெருமைக்கும் சிறுமைக்கும் இலக்கணம் பெருமையுடையவர்கள் அல்லது சிறுமை யுடையவர்கள் என்பதை அறியச் சாதனம் ஒன்றினை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தச் சாதனம்தான் அவரவர்கள் செய்கன்ற செயலேயாகும். ஒழுக்கத்தில் சிறந்த மக்கள் பண்பாட்டிற்கு ஏற்ற செயல்களைச் செய்தால் அவைகள் பெருமையினைத் தரும். இவைகளுக்கு மாறாக கடந்து கொண்டால் அது சிறுமையாகும். ஆதலினால் செயலினைக் கொண்டு வ.-6 - -