பக்கம்:வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 என்பதனை வினைபடுபாலால்' என்ற குறிப்புச் சொற். களினால் ஆசிரியர் மெய்ப்படுத்துகின்றார். அவரவர்களை அறிந்து கொள்ள வேண்டிய முறையும் இதுவேயாகும் என்பதை வற்புறுத்திக் கூறுகின்றார். கணை கொடிது யாழ் கோடு செவ்வி தாங்கன்ன-வினைபடு பாலாற் கொளல் இக் குறட்பா கணையும் யாழும் எவ்வாறு தங்கள் தோற்றத்தினா லும் செயல்களினாலும் மாறுபட்டிருக்கின்றனவோ அவ்வாறே உலகமக்கள் தோற்றத்தினாலும் செயல் களினாலும் மாறுபட்டிருக்கின்றார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது. - - செயல்களைக் கண்டு சிந்திக்கவேண்டும் ஆதலால்தான் அந்தப் பொருள்களைப் போலத். தான் உருவம் தாங்குகிறவர்களும், உருவம் தாங்காத - வர்களும் இருக்கின்றார்கள் என்பதை ஆங்கு அன்ன’ என்ற குறட்பாவின் சொற்கள் தெளிவு படுத்திவிட்டன. செய்கின்ற செயலினை வினை’ என்னும் செய லினைக் கொண்டே-அவர்கள் செய்கின்ற செயல் களைக் கொண்டே பாகுபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதன்ை வினைபடுபாலாற். கொளல் என்று முடிகின்ற குறட்பாவின் சொற்கள் தெளிவு படுத்தி விட்டன. - வேடம் தாங்கிகள் செய்கின்ற ஒழுக்கமற்ற செயல்கள் மிக மிகக் கொடுமையானவைகளாக இருந்து விடுகின்றன என்பதற்காகத்தான் கணை என்பதனை