இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
வாழ்க அவ்வுலகம்!
மொழிகாக்கப் போராட்டம் அங்கே யில்லை முத்தமிழும் செழித்தோங்கி வளர்வதாலே, அழிதிக்குள் எவ்வுடலும் கருக வில்லை அயல்மொழியைத் திணிப்பவர்கள் இன்மை யாலே பழிதூற்றும் வெங்கொடுமை அங்கே யில்ல ை பண்பாடு கற்றவர்கள் வாழ்வதாலே, அழிவாக்கி உயிர்போக்கும் சிறைகள் இல்ல ை அயலாட்சி அவ்வுலகில் இன்மை யாலே.
உள்ளுணர்வால் உணர்கின்ற கடவுள் வாழும், உயர்காதல் இல்லறமும் திகழ்ந்து காணும், தெள்ளுதமிழ் ஆட்சிபெற்றுச் சிறந்திருக்கும், திதகல மக்களிடம் ஒழுக்கந் தோன்றும், உள்ளமதில் பழகுகிற நட்பிருக்கும், உட்பகையைத் தவிர்சுற்றம் சூழ்ந்தி ருக்கும் வள்ளுவனார் நல்லுலகம் வாழ்க என்போம் வளர்கஅது தொடர்என வணங்கி நிற்போம்.