பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவம்

           பகைமைக்கு மருந்து

பல்பிணியுங் குடிகொண்ட குமுகாயத்தைப் பற்றியுள நோய்நாடி முதலும் நாடி நல்வகையில் அதுதணிக்கும் வழியும் நாடி நலம்வாய்க்க மருந்தளிக்கும் வள்ளு வம்போற் சொல்வகையில் ஒன்றில்லை; எரியுஞ்செந்தி தோய்வன்ன இன்னாத செயினும் நின்பற் புல்லவரும் ஒருவன்பாற் சினவேல் என்று புகல்மருந்து பகைமைக்குக் கைம்ம ருந்து.

கொன்றன்ன கொடுமைகளை ஒருவன் செய்தால் கொடுஞ்சினமும் பகைமையுந்தான்.அவன்மேற்றோன்றும்; என்றுமிது மாந்தனுளத் தியற்கை யாகும்; இப்பிணிதான் திரஒரு மருந்தும் உண்டோ? நன்றுண்டு முன்னரவன் உனக்குச் செய்த நலமொன்றை நினைத்துக்கொள்! பகைமை யாவும் அன்றொழியும் எனவுரைத்த வள்ளு வந்தான் அருமருந்து, கட்டுக்குள் அடைமருந்து.