பக்கம்:வள்ளுவர் கோட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளவர் கோட்டம்

48

 கவியரசர் முடியரசன்


வள்ளுவர் கோட்டம் 48 கவியரசர்


'மற்றொருவன் நல்வாழ்வைக் காணும் போது

     மனம்புழுங்கும் அழுக்காறும், அய்ம்பு லன்கள் 

சுற்றிவரும் வழியெல்லாம் சுழல விட்டுத்

    துய்க்குமவாக் கொள்மனமும் இவ்வி ரண்டால்

பற்றிவரும் வெகுளியுடன் இன்னாச் சொல்லும்

    பறித்தெறிந்து வாழ்வதுதான் அறமாம் என்றேன்

சொற்றவெலாம் மறந்துவிட்டுச் சுற்று கின்றாய்

   தூயநெறி காட்டிவிட்டேன் நடந்து காட்டு

'காட்டியஇவ் வழிதனில்நீ நடந்து சென்றால்

    கவலையிலா மனிதனென வாழ்வாய் என்றான்;

ஊட்டியஇவ் வறவுரைகள் நெஞ்சிற் கொண்டேன்

    ஒப்பில்லாக் மொழிப்புலவ! எனக்கோர் அய்யம்

ஒட்டிடுக! அறங்களிலே சிறந்த தொன்று

    துறவறமா? இல்லறமா? உரைக்க என்றேன்; 

"ஏட்டிலதைப் பார்த்திலையோ? எல்லா ஏடும்

   அறமென்பதில்வாழ்க்கை ஒன்றே தம்பி

‘மாலையிட்ட மங்கையினை வஞ்சி யாமல்

  மனம்விரும்பி இனியசொலி ஒன்று பட்டுக்

காலையிளம் பரிதியெனக் குழந்தை பெற்றுக்

  கழறுகிற மழலைமொழி கேட்கும் இன்பம்

போலவரும் இன்பமிங்கே ஒன்றும் இல்லை!

  புரியாத தெரியாத உலகம் வேண்டிக்

கோலமது தவசியென வேட மிட்டுக்

  கொடுமைசெயல் அறமன்று, தெளிக சிந்தை