வள்ளவர் கோட்டம்●
86
● கவியரசர் முடியரசன்
வள்ளுவர் கோட்டம் 9 88 ைகவியரசர் முடியரசன் நான்குபுறம் வேலியென நன்றே அரணமைத்துப் பங்குபெறும் நல்லறத்தைப் பாய்ச்சி வளர்த்தோம்பி நட்பாம் உரமிட்டு நன்குவிளை கழதனால் கொட்பா திருக்கக் குடியோம்பும் காராளன்; செப்பும் எழுத்தெல்லாம் சேரும் அசைஎல்லாம் ஒப்பில் புலவனவன் ஒதுசிர் எல்லாம் அடியெடுத்து வைத்தால் அறநெறியில் வைக்கும் தொடையடுத்த பாவெல்லாம் தூய அறமனக்கும்; காமக் கடும்புனலை நீந்திக் கரைகான ஏமப் புணையாக இல்லறத்தைச் சொல்லிவைத்தான்; சொல்லாப் பொருளில்லை சொன்ன பொருளிலெலாம் இல்லா அறமில்லை எல்லாம் அவனுரைத்தான்; ஆசான் மொழிந்த அறநெறிகள் கேட்டபினும் பேச திருக்கின்றோம் பேணாமல் அந்நெறியை, வள்ளுவத்துப் பேராசான் வையப் பெரும்புலவன் உள்ளத்தால் நாமுணர ஒதிவைத்தான் செம்பொருளை: பொல்லாங்கை நீக்கிப் புவியோர் அறிவுபெற எல்லாரும் ஏத்தும் இறைநெறியைக் கற்பித்தான்; ஆனாலும் அந்நெறியை ஆய்ந்துரைத்த செம்பொருளைக் காணாதலைகின்றோம் கண்மூடிக் கெட்டழிந்தோம்; எல்லாருங் கொண்டொழுகற் கேற்ற நெறிவிடுத்துப் பொல்லா நெறிபுகுந்து புந்தி யிழந்தோம்; அரனென் றொருகடவுள் ஆனாலும் செய்யும் அறனை மறந்தே அலைதலன்றி யாதுகண்டோம்? மாலென்றோம் அன்னவனை மாயன் என அழைத்தோம் மால்கொண் டுழல்கின்றோம் மாயங்கள் செய்கின்றோம் புத்தன் எனமொழிவோம் புத்தி தனையிழந்து