பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రీ ள்ைளுணர் சோல்லமுதம் வுடலையும் கண்டாள். அவன் பகைவனது வேலால் இரு கூருகச் சிதைந்து கிடப்பதைக் கண்டாள். அவனைப் பெற்ற நாளினும் பேருவகை கொண்டாள். மற்ருெரு வீச மகள், முதல்தான் போரில் தன் கணவனை இழந்தாள். அதற்கு முள்ளுள் நிகழ்த்த போர்களில் தமையன்மாரையும் இழந்துவிட்டாள். பின்னும் போர் முரசின் முழக்கத்தைக் கேட்டுப் பெரு வீரக் கொண்டாள். தன் குடிக்கு ஒரு மகன் போர் புரியச் செல்லவேண்டுமென விரும்பிளுள். தனக்கிருந்த ஒரே தனிமகனை அருகழைத்தாள். அவனது குடுமியில் எண்ணெய் நீவி இடையில் வெள்ளாடை உடுத்திக், கையில் வேலினைக் கொடுத்தாள். 'மகனே 1 செருமுகம் நோக்கிச் செல்க !' என விடுத்தாள். அவளது உறுதி யான மறத்தை என்னென்று உரைப்பது இத்தகைய மானக் குன்ருத மறத்தைப் பேணி வந்தனர் தமிழ் மறவர். மறவர்களேயன்றிப் பிறரும் மானத்தைப் பேனக் கடமைப் பட்டவர். மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிது என்ருர் பூதஞ்சேந்தனர். காட்டுப் பசுவைக் கொன்ற கடும்புலி. அப் பசு தனக்கு இடப்பக்கமாக விழுமாயின் அதனை உண்துை அகலும். அது போலவே விழுமியோர் தம் மானம் கெட வரும் வானரசையும் விரும்பார் என்று காலடி நூல் நவின்றது. கடம் தொச்ைசிய கானுறை வேங்கை இடம்வீழ்த்த துண்ணு திறக்கும்-இடமுேைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் அழுங்க வரின் என்பது அந் நாலடிப் பாடலாகும். பகுத்தறிவற்ற விலங்காகிய வேங்கையும் மானமுடைய மறத்தையே விரும்புகிறது.