置经 வன்குவச் சொல்லமுகம் வேண்டிய பஞ்சும் அவ் உழுதொழிலால் கிடைப்பதே. ஆதலில் மக்கள் மேற்கொள்ளும் தொழில்கள் பலவற்றுள் தூய்மையும் முதன்மையும் வாய்ந்தது உழவே இதனை வேளாண்மை என்றும் பயிர்த்தொழில் என்றும் குறிப்ப துண்டு. இத் தொழில் புரியும் மக்களை உழவர், வேளாளர், குடியானவர் முதலிய பல பெயர்களால் குறிப்பர். வேளாளர் உழுதுண்டார், உழுவித்துண்பார் என்ற இருவகையினராவர். தாமே நிலத்தை உழுது பயிரிடுவோர் உழுதுண்ணும் வேளாளர் எனப்படுவர். பிறரைக் கொண்டு நிலத்தைப் பயிரிடுவோர் உழுவித் துண்ணும் வேளாளராவர். முன்னவர் பெரும்பாலும் வறிஞரே. பின்னவர் எல்லோரும் பெருநிலக் கிழார்களே. இவர்களே வேளிர் என்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் பாராட்டும். வேளிர் குலத் தலைவர்கள் குறுநில வேந்தர் 'ర్హోల్ద్వ • • & 8 * கனாய் விளங்கினர். இவர்கள் விருந்தினரைச் சிறந்த முறையில் பேனும் ப்ெருந்தகையாளர்கள். இதஞலேயே தல்லாதனுர் என்னும் புலவர், வேனனன் என்பான் விருத்திருக்க உண்ணுதான் என்று வேளாளனுக்கு இலக்கணம் விசித்தாசி பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே நமது முன்ளுேள் உழவுத் தொழிலின் உயர்வையும் அதன் நுணுக்கங் களையும் நன்கு தெரிந்திருந்தனர். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் உழவுத் தொழிலைப் பற்றிய உண்மைகள் காணப்படுகின்றன. நிலத்தை நான்கு வகையாகப் பிரித்து, அவ்வத் நிலத்திற் கேற்றவாறு பண்படுத்திப் பயிரிட்டு வந்தனர். குறிஞ்சி முதலாய திலங்களில் பயிரிடத்தக்க பயிர்கள் யாவையென்பதை இனிது உணர்ந்திருந்தனர். ஆதலின் தமிழ்நாட்டில்
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/22
Appearance