உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-3.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்பமும் துன்பமுக் §§ மாகத் தோன்றலாம். ஒருவற்குத் துன்பமெனப் படுவது. இன்ளுெருவற்கு இன்பமென இருக்கலாம். எல்லாம் அவனது உள்ளத்தின் இயல்பைப் பொறுத்ததாகும். மெய்ப்பொருளில் நாட்டமுடைய மேலோர் பிறர் பேசும் வன்சொல்லே இன்சொல்லாகக் கொள்வர். கூழை நெய். பெய்த சோறென்று கொள்ளுவர். மிகவும் கசப்பான பொருளை வெல்லக் கட்டியென விரும்பி யுண்பர். இத்தகைய மாற்றத்திற்குக் காரணம், அவர்தம் உள்ளத் தில் கொண்ட கோட்பாடே. மக்கள் அறத்தோடு பொருந்தி வரும் இன்பத் தையே அனுபவித்தல் வேண்டும். அதற்குப் புறம்பாக வரும் இன்பமெல்லாம் ஒருகால் இன்பந்தரினும் பின்னர்த் துன்பத்தையே பெருக்கும். அஃதன்றிப் புகழையும் அழிக்கும். ஆதலின் அறத்தான் வருவதே இன்பம்’ என்று அறிவுறுத்திஞர் திருவள்ளுவர். இல்லற வாழ்வில் எழிலும் கற்பும் மிக்க இல்லாளைப் பெற்றவன் இணையிலா இன்பத்தை எய்துவான். 'இல்லதென் இல்லவன் மாண்பானுல் உள்ளதென் இல்வைன் மண்ணுக் கடிை’ என்பதன்ருே வள்ளுவர் சொல்லமுதம் ? மனையறத்தின் அணிகலனுய்த் திகழ்பவர் மக்கள். மக்கட் செல்வமே மிக்க செல்வமெனத் தக்கோர் கூறுவர். பெற்ருேர்க்குத் தம் பிள்ளைகள் இளங்கையால் அளாவப் பெற்ற கூழ், அமிழ்தினைக் காட்டிலும் அதிக இன்பத்தை அளிப்பதாகும். அவரது மெய்யைத் தீண்டுதல், பெற். ருேர்க்கு மிக்க இன்பம் தருவதாகும். அவரது மழலை மொழிகளைக் கேட்பது செவியினுக்குச் சிறந்த இன்பம் பயப்பதாகும்.