உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. அரணும் உரனும் நாடாளும் வேந்தர்க்கு அறுவகை உறுப்புக்கள் அமையவேண்டும். படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறும் சீரிதின் அமையப் பெற்ற செங்கோல் வேந்தனே பேரரசனுக-அரசருள் ஏமுகத் திகழமுடியும் என்ருர் திருவள்ளுவர். படைகுடி கூழ் அமைச்சு நட்(பு)அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.” என்பது அவர் சொல்லமுதமன்ருே ! இவ் அறுவகை உறுப்புக்களுள் சிறப்பு வாய்ந்த அரண், குறட்பாவில் இறுதியில் கூறப்பட்டாலும் நூலில் அதற்குத் தக்க இடமளித்தே நம் தமிழ் நாவலர் பேசுவார். பொருட்பாலில் அரசியலும் அமைச்சியலும் வகுத்தருளிய வள்ளுவர் அவ் அரசு அமைச்சுகளால் புரக்கப்பெறும் காட்டினே, அவற்றை அடுத்து விரித்துரைத்தார். அந் நாட்டையடுத்தே அவரால் அரண் விளக்கப்படுகிறது. ஆதலின் அரசியல் உறுப்புக்களுள் அமைச்சு, நாடு, அரண் என்ற வைப்பு முறையால் அதற்குரிய இடத்தை, வள்ளுவர் கொடுத்துத்தான் வகுத்துரைக்கின்ருர். நீர்வளம், நிலவளம், மலைவளம், அலைவளம் ஆகிய நால்வகை வளங்களையும் ஒரு நாடு பெரிதும் படைக் திருக்குமாயின் அந்நாட்டிற்குக் காவல் மிகவும் இன்றி யமையாத ஒன்ருகும். ஆதலின் நாட்டிற்குப் பிற வளங்களாகிய உறுப்புக்களுடன் அரணும் ஓர் உறுப் பாகும் என்று குறிப்பிட்டார் திருவள்ளுவர்.