உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வள்ளுவர் சொல்லமுகம் இருபுனலும் வாய்ந்த மலேயும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற் குறுப்பு.’ என்பது அவர் சொல்லமுதம். பலவகை வளங்களும் நிறைந்த நாட்டின்மீது பிற காட்டவர்க்குப் பெரு நாட்டம் இருப்பது இயற்கை. அவர்கள் பகைமை கொண்டு படையுடன் அங்காட்டினப் பற்றமுயல்வர். ஆதலின் அவர்களிடமிருந்து தன்னேக் காத்துக் கொள்ள வளமுடைய நாட்டிற்கு வலமுடைய அரணம் வேண்டுவதாகும். அதேைலயே வல்லாண், நாட்டிற்கு உறுப்பு என்று நவின்றருளினர் வள்ளுவர். அரண் என்பது காவல் என்ற பொருளைத் தரும் சொல்லாகும். அரச மாளிகைகளே இன்றும் அரண்மனை என்று சொல்லும் மரபுண்டு. எம் அம்பு கடிவிடுதும் தும் அரண்சேர்மின் என்பது ஒரு புறப் பாடல் அடி. இவ்விடத்து அரண் என்னும் சொல் காப்பான இடம் என்ற பொருளையே தக்து நிற்கிறது. காட்டிற்கு இன்றியமையாத பொருள்களையும் படை களையும் பாதுகாத்து வைக்கும் இடமே அரண் எனப் படும். இதனை மதில் என்றும் கோட்டை யென்றும் குறிப்பதுண்டு. அரசர்க்குரிய தலைநகரங்களும் அவர் தம் மாளிகைகளும் அரண்களைப் பெற்றிருக்கும். அவை சிற்றரண், பேரரண் என்று இருவகைப்படும். சிற்றரணக் குறும்பெனக் குறிப்பர். பேரரணே அருப்பம் என்று பேசுவர். பண்டை மன்னர்கள் அமைத்த அரண்கள் பல ஆங்காங்கு நம் காட்டில் பாங்குற நிலவக் காண்கிருேம். அவற்றை இக்காளில் கோட்டை யென்றே குறிப்பர். காட்டிற்குப் பெருங்காவலாய் அமைந்தகோட்டை கள் நால்வகைப்படுவனவாகும். அவை நீராண்,