பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசனும் உானும் 97. நிலவரண், மலையாண், காட்டரண் என்பனவாகும். இந்நால்வகை அரண்களும் சில நாடுகட்கு இயற்கை யாகவே செம்மையுற அமைந்திருக்கும். இன்றேல் அவ் அரண்களைச் செயற்கையாகவும் அரசர் அமைத்துக்கொள்வர்.

  • மணி நீரும் மண்ணும் மலேயும் அணிதிழல்

காடும் உடைய தரண்.’ என்பது வள்ளுவர் சொல்லமுதம். இந்நால்வகை அரண்களும் ஒன்றையொன்று அடுத்தும் தொடர்ந்தும் அமைந்திருப்பனவாகும். நீரரண் என்பது அகழியாகும். வற்ருத பேராறுகள், நாட்டின் காலா பக்கங்களிலும் பாய்ந்துசெல்லு மானுல் அவைகளே இயற்கையான ாேரணுக நிலவும். நான்கு பக்கமும் கடலாம் சூழப்பெற்ற நாடாக இருந்தாலும் அஃது இயற்கையான ரோணேப் பெற்றதே. செய்ற்கையாக அமைக்கப்பெற்ற அகழி யில் பளிங்குபோல் விளங்கும் தெளிந்த நீர் கிறைக் திருக்கவேண்டும். அதனையே மணிர்ே என்று குறித் தார் வள்ளுவர். தெளிந்த நீர்தான் ஆழம் தெரியாத வாறு அடிநிலத்தை அண்மையில் உள்ளதாகக் காட்டிப் பகைவர்க்கு அழிவைத் தரும். நிலவாணுவது நீரும் நிழலும் இல்லாத வெள் ளிடையாக விளங்குவது. அஃது இடுமுள் புதைத்த மணற் பரப்பாக இருக்கும். பகைவர் கடக்கமுடியாத உயரத்துடன் நீண்டு செங்குத்தாக நிலவுவது மலேயரண். பெரிய முள் மரங்கள் செறிந்து கிறைந்த பெருங்காடு சூழ்ந்திருப்பதே காட்டரண் எனப்படும். இதனை அணி நிழற் காடு’ என்று குறித்தார் வ. சொ.-TW-7