106 வள்ளுவர் சொல்லமுதம் மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலத்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளலிர், வாளிற் ருரலன்." என்பது கபிலரது புறப்பாடல். அரணுக்கு அமைய வேண்டிய எல்லா இயல்பு களும் இனிதின் அமையப்பெற்ருலும் ஒருகால் பகை வரால் தாக்குற்றுச் சிதைதலும் உண்டு. அங்கனம் அரண் சிதைந்து அழிந்தவிடத்து, அகத்துறையும் அரசன், அமைச்சர், அறிவாளர், மக்கள் முதலாயி ைைரப் பகைவர் தாக்கி அழிக்காதவாறு காக்க வல்ல கடமையுணர்ச்சியுடைய வீரர் பலரை, அவ்அரண், கொண்டு விளங்குதல் வேண்டும். அவர்கள் உற்ற விடத்து உயிரையும் வழங்கும் பெற்றியராய்ப் பற்றல. ரைக் கண்டு பணியாத மறமானம் படைத்தவராய் இருத்தல் வேண்டும் என்று குறித்தார் திருவள்ளுவர். எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் தல்லாள் உடைய தரண்.’ என்பது அவர் சொல்லமுதமாகும். அரண் ஒன்றைக் கைப்பற்றக் கருதும் பகை மன்னர் அகத்துள்ளார் புறத்தே போகவும், புறத்து வந்தார் உள்ளே புகவும் முடியாதவாறு தடைசெய்து முற்றுகையிடுவர். அங்ங்னம் முற்றியிருக்கும் போதே அாணேப் படை கொண்டு உடைத்து நெகிழ்ந்த இடத் தைத் தெரிந்து ஒருமுகமாகப் பொருது தாக்குவர். இங்ங்னமன்றி அகத்துறைவாரை வஞ்சனேயால் தம் வயப்படுத்தி அரணத் திறக்குமாறும் செய்வர். இங் வனம் பகைவர் செய்யும் மூவகை முயற்சியாலும் பற்ற
பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/114
Appearance