துறவும் உணர்வும் § லேயே எண்ணிலாத இன்பங்கள் உண்டாகும். அவற் றைப்பெற விரும்பினல் துறவு கொள்க என்று துற வறத்தில் விருப்பூட்டும் வள்ளுவர் வாய்மொழி வியப் பூட்டுவதாகும்.
- வேண்டினுண் உாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல: என்பது அவர் சொல்லமுதமாகும். துறவு நெறியில் சென்று விரைவில் வீடெய்த விரும்புவோர் ஐம்புல இன்பங்களையும் அறவே மறத்தலும் வெறுத்தலும் வேண்டும். பற்றுக்குக் காரணமாகும் யாதொரு பொருளும் அவரைப் பற்றியிருத்தல் கூடாது; ஏதேனும் ஒன்று உளதாயினும் மீண்டும் மயக்கைப் பெருக்கித் தவத்தைக் கெடுக்கும். பற்றை விளேக்கும் ஒரு பொருள் இருந்தாலே அது சார்பாக விட்டன வெல்லாம் ஒவ்வொன்முக வந்து ஒட்டிக்கொள்ளும். ஆதலின், பிறவி யறுக்கும் பெருநோக்குடன் துறவு பூண்டார்க்கு அதற்குக் கருவியாகிய உடம்பும் மிகையாம் என்ருர் அவ் உயர் நாவலர்.
- மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்ருர்க் குடம்பும் மிகை." என்பது அவர் சொல்லமுதம். தானல்லாத உடம்பை யானென்று இயம்புதல் அகப்பற்ரும். தன்னேடு இயைபில்லாத பொருளை எனது என்று உரைத்தல் புறப்பற்ரும். இவ் இருவகைப் பற்றும் ஒருவனுக்கு மயக்கம் காரண மாகவே எழுவன. அம் மயக்கத்தைக் கெடுப்பதே தெளிந்த ஞானத்தை அடைதற்கு வழியாகும். அத்தகைய ஞானத்தைப் பெற்றவரே வானவர்க்கும்