பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவும் உணர்வும் 9 படும். பிறப்பையும் அதற்குக் காரணமான மயக்கத் தையும் வீடுபேற்றையும் அதற்குக் காரணமான ஞானத்தையும் தெளிவாக உணரும் அறிவே மெய் யுணர்வு எனப்படுவது. இந்த மெய்யுணர்வுடை யார்க்கே வீட்டின்பம் உளதாகும். மெய்யுணர்வுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், எந்தப் பொருள் எவ் இயல்புடையதாகக் காணப் பட்டாலும் அத்தோற்றத்தைக் கண்டு விலக் காது, அப்பொருளின்கண் உளத்தையூன்றி அகன் உண்மை இயல்பைக் காண்பதே மெய்யுணர்வாகும் என்றர். மேலும் பிறப்பிற்கு முதற் காரணமாகிய மயக்கம் நீங்குதலும் வீட்டிற்குத் துணைக் காரணமாகிய இறையருளைப் பெறுவதும் அம்மெய்யுணர்வாகும் என்று வகுத்தருளினர்.

  • பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு." என்பது அவர் சொல்லமுகமாகும். மெய்ப்பொருளைக் காண்பதற்கு வள்ளுவர் ஒரு வழியைக் காட்டுகிருர் அனுபவம் முதிர்ந்த ஞான தேசிகர்பால் அறவுரைகளைப் பணிந்துகின்றுகேட்டல் வேண்டும். அங்கனம் கேட்ட அறவுரைகளின் பொருளை அளவைகளால் தெளிவுற ஆராயவேண்டும். அம்முறையாலேயே மெய்ப்பொருளே எளிதில் உணர முடியும். அங்ஙனம் முறையாக உணர்ந்தோர் மீண்டும் பிறவிக் கடலில் விழுந்து அழுந்தார் என்று விளக்கி யருளினர் வள்ளுவர். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி.” - - என்பது அவர் சொல்லமுதமாகும்.