பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1é வள்ளுவர் சொல்லமுதம் இத்தகைய மெய்யுணர்வைப் பெற்ற மேலான துறவோர்க்குக் காமம், வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள் மூன்றின் பெயருங்கூடத் தெரியாது கெட்டொழியும். அதல்ை அவற்றின் காரியமாக உள்ள வினைப்பயன்கள் அவரைச் சாரமாட்டா என்று கூறியருளினர் பெருகாவலர். துறவின் சிறப்பை விளக்குதற்கென்றே தமிழில் பெருங்காவியம் ஒன்று பிறந்தது. சித்தலைச் சாத்தனர் அருளிய மணிமேகலையே அக்காவிய மாகும். அதனை மணிமேகலை துறவு என்றே குறிப்பார் அப்பெரும் புலவர். அவர்தம் காவியத்தில் * உலகில் பிறந்தோர் அனைவரும் பெருந்துன்பத் தையே பெறுவர் ; பிறவாத பேறு பெற்ருேரே பேரின்பத்தைக் காணுவர் ; துன்பக்தரும் பிறப்போ பற்றுக் காரணமாக வருவது; அப்பற்றை முற்றுங் துறக்கோரே பிறவித் துயர் நீங்கிப் பேரின்பப் பெரு வாழ்வு எய்துவர், என்று குறித்தருளினர். * பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிறவார் உறுவது பெரும்பே ரின்பம் பற்றின் வருவது முன்னது பின்ன(து) அற்ருே குறுவ தறிக.” என்று துறவை வலியுறுத்தினர் அச் சாத்தனர். இத்தகைய உண்மைத் துறவு பூண்டு உயர்ந்த மெய்ஞ்ஞானம் கைவரப்பெற்ற ஞானியர் பலர் வாழ்ந்த நாடு நம் பாரதப் பொன்னடு. அதேைலயே தேசிய கவிஞராகிய பாரதியாரும், 4 மாரத வீரர் மலிந்த தன்னுடு - * . ... - மாமுனிவோர்பலர் வாழ்ந்த பொன்டுை."