உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவும் காமமும் 13. பொருளை விளையாட்டாகக் களவாடினும் பிழை யன்று. துறவோர் அதனைக் கருதினும் பெரியதோர் இழுக்காகும். ஆதலின் களவைத் துறவில் வைத்து வலியுறுத்தினர் வள்ளுவர். ஒருவன் உறவினருடனே பகைமை கொண்டு உயிரை நீக்கிக்கொள்ள நினைந்து முனைந்தான். பிறர் காணுவகையில் நஞ்சுண்டு இறப்பேன் என்று கெஞ்சில் உறுதி பூண்டான். அதற்காக நஞ்சையும் கூட்டித் தனியிடத்தே வைத்தான். அவனது மறைந்த செயலை உறவினன் ஒருவன் எங்ஙனமோ உணர்ந்துகொண்டான். அவன் அறியாமல் சென்று அந்நஞ்சை எடுத்துக் கொட்டிவிட்டான். கஞ்சுண்டு இறக்கத் துணிந்தவன் நஞ்சைத் தான் வைத்த இடத் தில் வந்து பார்த்தான். அதனைக் காணவில்லை. அதல்ை அவன் இறவாது மீண்டான். அவ் உறவினன் செய்த களவு, ஒருவன் உயிர் பிழைத் தற்குக் காரணமாயிற்று. இத்தகைய நன்மையை விளக்கும் களவு, இல்லறத்தார்க்கே உரியதாகு மன்றித் துறந்தார் அதனைத் தம் தூய உள்ளத்தில் கருதலும் தகாததாகும். துறந்தார் ஞானத்திற்குக் காரணமாய மெய்ந்நூற் பொருளேயேனும் ஆசிரியனை வழிபட்டல்லாமல் அவனே வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாகும். பிறரை வஞ்சித்துச் சிறுபொருளையும் கவரக் கருதாதவன் தவத்தோரால் தலைசிறந்த ஒழுக்க முடையான் என்று மதிக்கப்படுவான். பிறன் ஒருவன் பொருளே அவன் அறியாத வகையில் வஞ்சித்துக் கவர்ந்துகொள்வோம் என்று கெஞ்சத்