பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவும் காமமும் 23 இனி, இன்பத்தையெல்லாம் துறந்து தவநெறி யினே மேற்கொண்ட துறவோர் மனவுறுதியின்மை யால் தாம் விட்ட காம இன்பத்தைப் பின்னும் விரும்புவராயின் அதுவும் காமத்தின்பாற்பட்ட தீய வொழுக்கமே. அதனேயே கூடாவொழுக்கமெனக் கடிந்து பேசினர் திருவள்ளுவர். துறவோன் தான் கொண்ட தவக்கோலத்திற்கு மாருக வஞ்சம் பொருந்திய மனத்தனய்க் காம மயக்கம்கொண்டு மறைவாக மாகரை நாடி அலைவானுயின் உடம்பாக அவனுடன் கலந்திருக்கும் ஐந்து பூதங்களுமே தம்முள் கைக்கும். கோலத்தால் மறைத்துக் கொண்ட அவனது சிலமற்ற தீயொழுக்கத்தைப் பிறர் அறியார் என்று அவன் கினைந்தாலும் அவனெடும் எங்கும் கலந்து பரந்திருக்கும் ஐம்பெரும் பூதங்கள் அவன் செயலுக்குத் தக்க சான்ருகும் என்பார் தமிழ்ப் பெரும்புலவர்.

  • வஞ்ச மனத்தான் படிற்முெழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.’ என்பது அவர் சொல்லமுதமாகும். இத்தகைய வஞ்சகர்க்குக் குமரகுருபர அடிகளார் செஞ்சொல் அறிவுரையொன்று வழங்கியருளினர். அவர்களே மதியிலிகளே ! என்று விருது சூட்டி விளித்துக்கொண்டார். நீங்கள் எல்லோரையும் உங்கள் தவக்கோலத்தால் ஏமாற்றிவிட்டோம் என்று எண்ணி மகிழாதீர்கள். எங்கும் கண்களாக நிறைந்து நின்று காணும் கடவுள் ஒருவன் உளன். அவனே வஞ்சிக்க எவராலும் இயலாது. மறைந்து செய்யும் எச்செயலையும் அவன் கண்டுகொண்டே இருக்கிருன். அந்த