உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 வள்ளுவர் சொல்லமுதம் ஒருவன்பால் இனிது அமைந்துவிட்டால் அஃது ஒன்றே போதுமானது என்று புகன்றருளினர் நம் பொய்யில் புலவ்ர். -

  • தகுதி யெனஒன்று தன்றே பகுதியா ற்

பாற்பட்டு) ஒழுகப் பெறின்." - என்பது அவர் சொல்லமுதமாகும். இத்தகைய நடுவு கிலேயுடையாரைத் தக்கார் என்று குறிப்பிட்டார் தமிழ்நாவலர். மேலும் இவ் அறத்தைச் செப்பம் என்றும் குறித்தருளினர். செப்பமாகிய நடுவுநிலைமைக்கு வள்ளுவர் வகுக் கும் இலக்கணம் யாது? சொல்லிலே கோணல் இல் லாமல் நிற்பதே கிடுவுநிலைமையாகும். சொற்கோணல் இல்லாதிருக்க உள்ளம் கோணுதிருக்கவேண்டும். உள்ளத்தில் நேர்மை திட்பமாக நிலவுதல் வேண்டும். அப்பொழுதுதான் சொற்கோட்டம் இல்லாத செப்பம் திட்பமாகப் புலப்படும். . சொற்கோட்ட மில்லது செப்பம் ஒருதல்யா உட்கோட்டம் இன்மை பெறின்." என்பது நடுவுநிலைக்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் சொல்லமுதமாகும். நடுவுநிலை பிறழாத கல்லோர் அறத்தின் வழுவாத வல்லோராவர். அவர்கள் செல்வம் அறவாயிலாக ஈட்டப்பெற்றது. ஆதலின் அச்செல்வம் பிறர் செல்வம்போல் அழிவதன்று. எனவே அவர்தம் வழித்தோன்றுவார்க்கும் வலியாக கின்று உதவும் அச்செல்வம். ஆகையால் நடுவுநிலை தவறுவதால் பெறும் செல்வம் நன்மையே தருவதாக இருந்தாலும் அது வரத் துவங்கும் அப்பொழுதே ஒழியவிடுக