உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வள்ளுவர் சொல்லமுதம் கருத்துக்கு மாமுகப் பேசாதிருக்கும் பெற்றியே என்று கூறினர் அதிவீரராமர். கற்பு என்பது கற்றல் என்று பொருள்படும். கற்ற கல்வி அறிவே, ஒருவன் அல்லது ஒருத்தி ஒழுக்கத்தைப் பெற்று உயர்தற்குக் காரணமாவது. அறிவின் பயன் ஒழுக்கம் என்றே ஆன்ருேரர் குறிப்பர். பெண்ணுெருத்தி மணம் பெறுவதற்கு முன்னர்ப் பெற்ருேரால் ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுக்கப்பெறுவாள். அவள் மணம்புரிந்து மனையறத் தில் புகும்நாளில் மணந்துகொண்ட கணவனுலும் அவன் தந்தை தாயராகிய மாமன் மாமியராலும் மனேயற நெறிகள் இவையென அறிவுறுத்தப் பெறு வாள். இங்ங்னம் பெற்ருேரும் உற்முேரும் பேணுதற் குரிய கணவனும் கற்றுக்கொடுக்க அதனல் மேற். கொண்டொழுகும் அரிவையரின் ஒழுக்கநெறியே கற்பெனப்படுவதாயிற்று. இத்தகைய கற்பின் ஏற்றத்தை வலியுறுத்த வந்த இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியர், மகளிர்க்கு நாணம் அவரது உயிரினும் சிறந்ததாக ஒம்பத் தக்கது; அதனினும் உயர்ந்ததாகக் காக்கத்தக்க மாண்புடையது கற்பு என்று வற்புறுத்தியுரைத்தார். ' உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் - செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று." என்பது அவர் நாற்பாவாகும். மகளிர் கற்பொழுக்கத்தால் தம்மைச் செம்மை சான்ற செல்வியராகக் காத்துக்கொள்ளும் கடமை பூண்டவர். அக் கற்புக் காவலே அன்னர்க்குப் பெருங் காவலாக விளங்குவது. கணவர், மனைவியராகிய மகளி