பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்மையும் திண்மையும் 47 ரைச் சிறையால் காக்கும் சிறுசெயல் எந்தப் பயனையும் தந்திடாது. அவர்கள் அச் சிறையினைக் கடப்பதற்கு உள்ளத்தே கருதிவிட்டாராயின் தப்பிச் செல்லுவது உறுதியே என்று.குறித்தார் திருவள்ளுவர். சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலே." என்பது அவர் சொல்லமுதமன்ருே. கற்பென்னும் திண்மையுடைய பெண்டிாை மணந்துகொண்ட ஆடவர்க்கு நிலவுலகில் ஒரு பெருமை உண்டு. அவர்களைப் பழித்துரைக்கும் பகைவர் முன்னும் ஆண்சிங்கம் போன்று தலை கிமிர்ந்து நடக்கும் பெருமித நடை அவர்க்கு உள தாகும். கணவரைத் தெய்வமெனக்கொண்டு வணங்கி யெழும் பெண்டிர்க்குத் தேவர்களும் ஏவல் கேட்பர் அவர்கள் பெய்யென்று கட்டளையிட்டால் மழையும் பொழியும் என்று புகன்றருளினர் நம் புலவர். இனி, முனிவர் ஒருவர் மொழித்தருளும் பெண் னிலக்கணத்தைக் காண்போம். பெண்ணுவாள் கண்ணுக்கினிய கட்டழகு பெற்றிருக்கவேண்டும். காதலன் விருப்புக்குகந்த வகையில் தகுந்தவாறு தன்னை அணிசெய்துகொள்ளவேண்டும். காணமும் அச்சமும் பேணும் பெற்றியளாகவேண்டும். ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்பதை உணர்ந்து கணவ அனுடன் ஊடுதலும் விரைந்து உணர்தலும் உடைய வளாகவேண்டும். இன்மொழி பேசும் நன்மையளாக வேண்டும். இன்ன பல குணங்களும் இனிதின் அமைக் தவளே வாழ்வரகியாக விளங்கமுடியும் என்று விளக் கினர்.அச் சமணமுனிவர். -