பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர், ஒர் அறிவூற்று. அவ்வூற்றில் ஊறிச் சுசக்த தேனீர் ஊற்றுக் கால்களே ஏனைய நூல்கள். வள்ளுவர் காட்டிய வழியே வழி; மற்ருேர் வகுத்தன, காலத்தாற் படாது செல்வனவாம். எனவே, வள்ளுவர் ஒருவரே புலவர். இதஞனே, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்டது நம் தமிழ்நாடு; தாய்நாடு. சம் தாய்நாடு, ஏனைய சேய் நாட்டிற்கும் இவரை உரிமை யாக்கிற்று. அமிழ்து, நரை திரை மூப்பு பிணி நீக்கி உடற்குச் செம்மைதரும் அரிய மருந்து. வள்ளுவர் அருளிய திருக் குறட் சொல்லமிழ்து, உடற்கன்றி உயிரினது அறியாமைப் பிணிப்பு நீக்கி, ஆறிவொளி கான்றெழுதரும் காளாமணி விளக்கு. இதன் பெருமையை அக்காலத்து ஆன்ருேரும், சிங்தைக்கினிய செவிக்கினிய வாய்க்கினிய, வங்த இரு வினைக்கு மாமருந்து எனப் போற்றுவாராயினர். இத்தகைய வள்ளுவர் வாய்மொழிக் கடலின் சொல்ல முதத்தை மொண்டு கொண்டெழுந்து அறிவு வானிலே கிற்கும் வித்துவான், திரு. அ. க. நவநீதகிருட்டிணன் என்னும் மாமேகம், உலகெலாம் பருகப் புத்தமிழ்தமாகப் பொழிந்துளது. இதற்கு வள்ளுவர் சொல்லமுதம் எனப் பெயரமைத்து அாலுருவாக்கி அவ் வான் அமிழ்தத் தலைப்பெயலாக முதல் மூன்று நூல்கள் முன்னரே வெளிவந்துள்ளன. அது போல் வழிப்பெயலாக் இந் நான்காம் புத்தகமும் வெளிவரு கின்றது. இதனையும் அன்பர்கள் வாங்கிக் கற்றுப் பயன் பெறுவார்களாக சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.