உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 வள்ளுவர் சொல்லமுதம் வெல்லுதற்கரிய விதியாகிய பழவினையைப் பற்றி காலடியார் பல கருத்துக்களைப் பகர்கின்றது. விளாங்காய் உருண்டு திரண்ட வடிவோடு விளங்கு கின்றது. களாங்கனி கருமை நிறத்துடன் காணப் படுகிறது. இவற்றை அங்கனமாக்கினர் உலகில் எவரு மில்லையன்ருே வளமான செல்வத்துடன் លrណ្ណ விரும்பாத மக்கள் யாவர்? எவரும் இலர். ஆனல் எல்லோரும் செல்வராக இருக்கின்றனரா? இல்ஜல. சிலர் வறியராகவும் வேறு சிலர் செல்வப் பெரிய ராகவும் விளங்குதற்குக் காரணம் அவரவர் ஆற்றிய ஊழ்வினையே. அவ்வினை துணே செய்தாலன்றி முயற்சி பெரும்பயனை விளத்துவிடாது என்பதே சமணமுனிவர் ஒருவரின் கருத்தாகும். இதனேயே மற்முெரு சமணமுனிவரும், வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால திண்டா விடுதல் அரிது.” என்று கூறி வலியுறுத்தினர். முற்றுந் துறந்த பட்டினத்தடிகள் தம் நெஞ் சிற்குக் கூறும் செஞ்சொல் அறிவுரையொன்றில் ஊழின் இயல்பு தெளிவாக உரைக்கப்படுகின்றது. ஒருவன் வாழ்வில் வரும் துன்பங்களைக் கண்டு அழுவ: தாலும் விழுவதாலும் பிறரைத் தொழுவதாலும் யாதொரு பயனும் விளையாது. ஒருவனுக்கு நன்மையும் இமையும் வருவதெல்லாம் முன்னே வினேயின் வண்ணமேயாகும். ஆதலின் அத் துன்பங்களைக் கண்டு, மனமே ! சலியாதிருப்பாய் என்று ஆறுதல் கூறினர் அத் துறவியார்.