பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TÜ வள்ளுவர் சொல்லமுதம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காவியமாகிய சிலப்பதிகாரம் மூன்று நீதிகளே கிலேநாட்டும் நோக் கத்துடனேயே ஆக்கப் பெற்றது. அந்நூல் வலி. யுறுத்தும் நீதிகள் மூன்றுள்ளும் முதன்மையாகவும் பிற இரண்டினுக்கும் அடிப்படையாகவும் விளங்கு இiஇடி - 'ஊழ்வினை உருத்துவந் துட்டும்’ என்ற நீதியேயாகும். இவ் உண்மையை அடிப்படை யாக வைத்துக்கொண்டே சிலப்பதிகார ஆசிரியர் அக்காவியத் தலைவன் தலைவியர்க்குக்குலைவு ஏற்படும் காலமெல்லாம் வினேவிளை காலமாதலின் என்றே விளக்கிச் செல்லுவார். இங்கனம் ஊழ்வினை ஒருவனே விடாது; அதனைச் செய்தவன் அதன் பயனே அனுப வித்தேயாக வேண்டும் என்ற உண்மையைக் கிண். மையுற விளக்குதற்கென்றே நம் தமிழகத்தில் பெருங் காவியம் ஒன்று பிறந்ததென்ருல் 'ஊழிற் பெருவலி யாவுள' என்று வள்ளுவர் வினவியதில் வியப் பென்னே ! இத்தகைய பேராற்றல் படைத்த ஊழை உலை யாத தாளாண்மையால் வெல்ல முடியும் என்ருர் வள்ளுவர். மனிதன் உள்ளுவன எல்லாம் உயர்க் தனவாக இருக்க வேண்டும். அவற்றை அடைதற்கு அயராத முயற்சியும் எடுக்கவேண்டும். ஊழ்வினை, அம் முயற்சியின் பயன் கிடையாதவாறு கடை செய்யலாம். அது ஒருமுறையோ இருமுறையோ தடை செய்வதன்றி எப்பொழுதும் தடுப்பதில்லை. பலமுறை முயல்வார்க்குப் பயனுண்டு; அந்த ஊழை வெல்லும் வல்லமை உண்டு என்பதை வலியுறுத்தும் வளளுவா