பக்கம்:வள்ளுவர் சொல்லமுதம்-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. மடியும் மறதியும் மக்களுள் சிலர் மிக்க கேட்டை யடைதற்குத் தக்க காரணமாவன நான்கு தீய பண்புகள். அவை மடியும் மறதியும் துயிலும் காலத்தாழ்வும் ஆகிய குற்றங்களே. இவற்றைத் திருவள்ளுவர், இறக்கும் இயல்புடையார் விரும்பியேறும் மரக்கலங்கள் என்று குறிப்பிடுவார். விரைவில் அழிவுறும் மக்கள் விரும் பிப் புனேயும் அணிகலங்கள் என்றும் அவற்றைக் கூறலாம். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநிரார் காமக் கலன்.' என்பது வள்ளுவர் சொல்லமுதமாகும். அழிவைத் தரும் இழித்த பண்புகள் நான்கனுள் மடியும் மறதியுமாகிய இரண்டைமட்டும் இப்பகுதியில் ஆராய்வோம். அவற்றுள் முதற்கண் மடி என்பதை நோக்குவோம். இதனைச் சோம்பல் என்றும் சொல் லுவர். இது தாமத குணத்தால் ஏற்படும் இழிந்த இயல்பாகும். ஒருவன் வாழ்வு மடிவதற்கு இஃ தொன்றே போதுமானதாகவின் இக்குற்றத்தை மடி என்று குறிப்பிட்டனர் 5ம் முன்னேர். சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என்று சுருக்கமாகச் சொன்னர் தமிழ்மூதாட்டியார். ஓரிடத்தில் சுடர் விளக்கை யேற்றினல் அங்குச் சூழ்ந்த இருளகன்று ஒளி விளங்குவதுதான் இயல்பு. அவ்விளக்கு நந்தா விளக்காயின் எந்த நேரத்திலும் அந்த இடம் ஒளியுடன் விளங்குமன்ருே குடும்பம் என்பது ஒரு குன்ருத விளக்கு. அது குன்றி